மனிதன்
பகுத்து அறிபவன்
பிரபஞ்சத்தின் பேரறிவு பெற்ற
மிருகம்...
ஆம் மிருகமென்றுதான்
சொல்லவேண்டும் இவனை..
ரத்த வேட்டையடும்
மிருகங்களுக்கும் சில
நியதிகள் உண்டு..
சிங்கத்தின் சீற்றமும் வெறியும்
அதன் பசி தணியும் வரைதான்
ஆனால் மனிதா நீ..
மதங்களின் பெயராலும்
இனங்களின் பெயராலும்
தோல் நிறங்களின் பெயராலும்
நீ நித்தம் நித்தம்
வேட்டையாடி வருகிறாய்
உன் சக மனிதனை....
இடத்தின் மீதும்
பொருளின் மீதும் கொண்ட
உன் ஆசைகள்
அகண்ட பிரபஞ்சத்தின்
விளிம்புதாண்டியும்
அடங்கிய பாடில்லை...
சக மனிதனின்
குரல்வளை நசுக்கி
உயரத்துடிக்கும் உன் வெறி...
பிற உயிர்களின் நரம்புகளில்
ஊஞ்சல் ஆட நினைக்கும்
கொடுரம்
எந்த உயிரினத்திடம்
கண்டு கற்றாய் இதை நீ..
உன்னுடைய மொழியில்
உன்னைவிட இழிந்தத்தின்
பெயர் மிருகமெனில்
என்னவாயிருக்கும் உன்பெயர்
மிருகங்களின் மொழியில்..
No comments:
Post a Comment