Mar 7, 2009

பயணம்

விமானத்தின் ஓசையில்
கரைந்து கொண்டிருந்தது
தாயின் கண்ணீரும்
மனைவியின் அழுகைச்சத்தமும்...
அப்பா என்று
அலறி கைநீட்டும்
செல்ல மகனுக்கு
கண்ணீருடன் கை அசைக்கிறேன்..
வில்லில் இருந்து விலகும்
அம்புபோல்
தொலைந்து கொண்டிருக்கிறேன்
என் தேசம் விட்டு...
உற்ற சொந்தங்களும்
உறவுகளும்
வந்து வழியனுப்பி நின்றுவிட்டன
எல்லைவரை...
விட்டுபிரிய மனமில்லாமல்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன
என்னுடன் பயணத்தை
வாங்கிய கடனும் வட்டியும்...


No comments: