Mar 7, 2009

உறங்கா இரவுகள்

உறக்கம் வராத

என் இரவுகளுக்கு பின்

எப்படியும் நீ இருப்பாய்..

உலர்ந்த நினைவுகளின் வழியே

எனை விலங்கிட்டு அழைத்துப்போகும்

கைதியாய்

எப்பொழுதாவது நீ வரும்

கனவுகள்...

திடுக்கிட்ட விழித்தழுக்கு பின்

தொடரும் உன் நினைவுகளின்

சவுக்கடி ரணங்களுக்கு

தொலைந்து போயிருக்கும்

அந்த இரவு...

எதுவும் தெரியா அந்த

கரிய இருட்டிலும்

எங்கிருந்தேனும் எனை

துளைத்தெடுக்கும் உன் விழிகள்..

உனது கருவறையாக இருந்து

இன்று கல்லறையான

என் இதய வெளிகளில்

நீ கண்ணீருடன் கரைந்து மறையும்

ஒரு நொடியில்

விடிந்திருக்கும்

என் உறங்கா இரவு..

No comments: