தெளிந்த நீரோட்டம் போல்
பிரகாசிக்கின்றன
மனித முகங்கள்
கருப்பு மனதின் சுவடுகள்
கண்டுணர முடியாவண்ணம்..
அன்பு உபசரிப்பிலும்
ஆர்ப்பாட்ட வரவேற்பிலும்
ஒன்றுமில்லை..
வெற்று வார்த்தைகளின்
சாயம் கரைகிறது
முகத்தின் பிரதிபளிப்புகளில்..
எதிர்பார்ப்புகளின் முடிச்சுகளில்
தூக்கிடப்படுகிறது
சக மனித உறவுகள்..
வரவுகளுக்காக மட்டுமே
உறவுகளுக்கு உயிர்தரப்படுகிறது...
காரணமில்லாத காரியம்
நிகழ்துதல்களில்
சுவாரசியம் தொலைத்துவிட்டன
உறவுகள்..
வரவுகளின் மகிழ்ச்சியில்
இழப்புகளின் வருத்தங்கள்
துடைக்கப்பட்டுவிட்டன..
வீழ்ந்த மனிதநேயத்தின்
சடலத்தை
கொத்திகிழிக்கிறான்
மனிதன் கழுகாய்..
மாற்றங்களுக்காக காத்திருந்து
மரித்துப்போன
மெல்லிய மனித உறவுகள்
மீண்டும் பூக்கலாம்
ஏதேனும் ஒரு
சுப நாளில்..
No comments:
Post a Comment