Mar 7, 2009

காதலும் மழையும்

இனித்த காதல்
கசக்க தொடங்கியிருந்த
ஓர்நாளில்
என்னை மறந்துவிடு என்று
ஒருவரியில் சொல்லிவிட்டு
ஒருநொடியில் மறைந்து போனாய் நீ..
சொல்ல வார்த்தையின்றி
உள்ளம் தவிக்க
உடைந்து பெருகும் கண்ணீரை
மூடிமறைத்து அந்த
திடீர் மழை..
நனைத்த உடலுக்குள்
கொதிக்கும் இதயத்தில்
வெடித்து சிதறின எரிமலையாய்
உன் வார்த்தைகள்
மெல்ல அணைத்துக்கொண்டது
அந்த மழையின் காற்று..
அப்பொழுதே என் உடல்தழுவி
வழிந்தோடி
எப்படியும் துடைத்து அழிக்க
துடித்தது அந்த மழை
உன் நினைவுகளை..
பின்னர்
காலம் மெதுவாய்
மூடிமறைத்த உன் நினைவுகளை
எப்படியும் எனக்கு
ஞாபகப்படுத்தி விடுகிறது
ஏதேனும் ஒரு
மழை பெய்யும் முன்னிரவு..

No comments: