குஞ்சாய் இருக்கையில்
கொஞ்சியவனை பார்த்து
அருமையானவன் மனிதன்
அன்பாய் முத்தமிடுகிறான்
என்றது...
வண்டி ஏற்றி வேறு ஊர்
அனுப்பியபோது
அன்பானவன் மனிதன்
உல்லாசமாய் ஊர் சுற்றி
காட்டுகிறான் என்றது..
கூண்டில் அடைத்து
கொறிக்க நெல்மணி
கொடுத்தபோது
உயர்ந்தவன் மனிதன்
உணவும் உறங்க இடமும்
தந்திருக்கின்றான் என்றது...
இறகு முறுக்கி தராசிலிட்டு
எடை வைத்தபொழுது
உத்தமன் மனிதன்
உறக்கம் கொள்ள
ஊஞ்சல் ஆட்டுகிறான் என்றது..
கழுத்தை திருகி
கத்தியால் அறுத்த போது
கத்தவே முடியாமல்
செத்துபோனது
கோழி...
No comments:
Post a Comment