திறந்த சாளரங்கள்
வழியே மெல்ல இறங்கும்
காலை வெளிச்சம் நீ
என் தினங்களை
பிரகாசம் செய்கிறாய்...
மலர்ந்த தோட்டத்தில்
கொத்து ரோஜா நீ
என் தினங்களை
வாசம் செய்கிறாய்...
உயர்ந்த முகட்டின்
ஒற்றை அருவி நீ
என் தினங்களை
குளுமை செய்கிறாய்..
என் ஒற்றை இதயத்தின்
ரத்த நாளங்கள் நீ
என் காதலை
என்னுள் வாழச் செய்கிறாய்...
No comments:
Post a Comment