Mar 8, 2009

காதலித்து என்ன பயன்..

கொஞ்சும் கிளியாய்
ஒரு ஜென்மம்
வேண்டும் உன்
தோள்கள் கொத்தி
மகிழ..
கொத்து மலராய்
ஒரு ஜென்மம்
வேண்டும் உன்
கூந்தல் மீது
வாசம் தூவ..
ஆழி முத்தாய்
ஒரு ஜென்மம்
வேண்டும் உன்
கழுத்தில்
ஆடி மகிழ...
கொட்டும் மழையாய்
ஒரு ஜென்மம்
வேண்டும் உன்
மேனி தொட்டு
வழிந்தோட ..
காகிதங்கள் கிறுக்கி
கற்பனை வானத்தில்
பறந்ததுதான் கண்டபயன்
காதலனாய் பிறந்ததில்..


No comments: