Mar 8, 2009

இரவு தேடல்..

அந்த இருட்டு அறையின்
ஒற்றை கட்டிலில்
இறுகி கிடக்கும்
இரு உடல்கள்..

உனது தேடலின் உச்சம்
நோக்கி நீ
அவள் தேடலின் உச்சம்
நோக்கி அவள்..
நீளும் உம்மிரு கைகளும்
நீண்ட ரயில் பயணத்தின்
தண்டவாளங்கள்
இணைந்தே தொடவேண்டும்
உச்சம் என்பதே
நியதி..
தோற்றது யார்
வென்றது யார்
ஆட்டம் முடிந்தால் தான்
தெரியும் இருவருக்கும்
வெற்றி என்பது..
எந்த பாத்திரத்தில்
எந்த சுவை
தேடும் இருட்டு பூனை
பாத்திரம் பூனை
இரண்டும் மாறலாம்..
தேடி ருசித்து
கலந்து கலைத்து
அயர்கையில்
எங்கேனும் உணரவேண்டும்
இரு உடல்களோடு
இரு உள்ளமும் கலந்ததை...
இல்லையெனில்
ஆடு மாடுகள் செய்யும்
நீ செய்ததை..


No comments: