Mar 13, 2009

செயராசு..

சிநேகம்
பால்ய வயதில் விளையாட்டு
பருவ வயதில் துணை
பழுத்த வயதில் ஆறுதல்..
ஆனால்
ஒருவனுக்கு
சிநேகமே ச்நேகமனால்
எப்படியிருக்கும்..
இது
பொறியியல் படித்தவனை
காதல் பொறிவைத்து
பிடித்த கதை..
அந்த மான் தான்
வேண்டும் என்று
பிடிவாதம் செய்ததால்
சிறைபட்டாள் சீதை..
அந்தமானில் இருந்து வந்த
அவள் தான் வேண்டும்
என்றதால்
காதல் சிறைப்பட்டான்
இவன்...
கல்லூரி நட்பு
காதலானது
காதல் மீண்டும் நட்பானது
கடைசியில் பகையானது..
இரண்டு வருட
இடைவெளிக்குப்பின்
மறுபடியும் இணைந்தன
இதயங்கள்..
பாண்டிச்சேரி இந்த
ஜோடியை ரசித்தது
கடைசியில்
அதுவே சிரித்தது..
நிறைய பூக்களில்
தேன்குடிக்க வண்டுகள்
இடம் மாறுவதுண்டு..
அவள் கால் முளைத்த
பூ என்பது தெரியாமலே
காதலித்தான் அவன்..

இதுபோன்ற பெண்களும்
கடன் அட்டை போலத்தான்
எடுத்து தேய்த்து
தூர வீசிவிடவேண்டும்
இல்லாவிட்டால்
கட்ட தவறிய
மாத தவணை போல
மூச்சை அடைக்கும்
கடைசியில்
அவள் நினைவுகள்..


No comments: