தொட்டு படரும்
விரல்களில்
பூக்கும் உன் பெண்மை..
நுகரும் சூடான
மூச்சு காற்றில்
பஸ்பமாகும்
உன் பருவம்...
உரசும் உதடுகளின்
ஸ்பரிசத்தில்
மெல்லச் சாகும்
உன் ஏக்கம்..
குத்தும் மீசை முடிகளில்
ஊஞ்சல் ஆடி களைக்கும்
உன் இளமை..
வளைத்து இறுகும்
கரங்களுக்குள்
சரணடையும்
உன் தனிமை...
அழுந்தும்
மார்பு கூட்டுக்குள்
புதைந்து கொள்ளும்
உன் வெட்கம்..
கலைந்து கிடக்கும்
உடைகளுக்குள்
தொலைந்து போயிருக்கும்
உன் கூச்சம்..
உதிர்ந்த பூக்களுக்கும்
உடைந்த வளையல்
துண்டுகளுக்கும் இடையே
மெல்ல விடிந்திருக்கும்
அந்த இரவில் ..
முகம் காட்ட மறுத்து
திரும்பும் உனக்கு
பதிலாய்
மெதுவாய் வெளிவரும்
சிவந்த சூரியன்...
No comments:
Post a Comment