Mar 15, 2009

பிள்ளை நிலா..

உன்னை சுமந்து
நடக்கும் பொழுதுகளில்
லேசாகும் என்
ஆன்மா..
உன்னை துரத்தி
பிடிக்க முயல்கையில்
மகிழ்வாகும் என்
தோல்வி..
நீ கடித்து தரும்
பண்டங்களின்
ஒளிந்திருக்கும் என்
சுவை..
நீ கைதொட்டு
வருடுகையில்
பறந்து போகும் என்
வலி..
நீ உடைத்து
விளையாடுகையில்
உறங்கும் என்
கோபம்..
நீ உதைத்து
அடிக்கையில் பொங்கும்
என் பாசம்..
நீ கைப்பிடித்து
முன் நடக்கையில்
குறையும் என்
வயது...
நீ கள்ளமில்லாமல்
சிரிக்கையில்
மோட்சம் பெரும் என்
வாழ்வு..

No comments: