ஈரம் தாங்கும்
நிலம் நீ
விதைப்பவன் நான்
உன்னை விளையச் செய்வேன்..
வாசம் தாங்கும்
மலர் நீ
கொய்பவன் நான்
உன்னை வீழச் செய்வேன்...
நாதம் தாங்கும்
வீணை நீ
கலைஞன் நான்
உன்னை இசைக்கச் செய்வேன்..
கனிகள் தாங்கும்
மரம் நீ
பசித்தவன் நான்
உன்னை சுவைக்கச் செய்வேன்..
காதல் தாங்கும்
தேவதை நீ
உன் காதலன் நான்
எனவே
உன்னை காதல் செய்வேன்..
No comments:
Post a Comment