முதல் வாழ்த்து
சொன்ன மனைவி
ஆசீர்வதித்த அம்மா
வாழ்த்து சொன்ன
நண்பர்கள்
எல்லோருக்கும் பதிலாய்
நன்றி சொல்லியாயிற்று..
நாம் பிறந்த நாளை
நாமே கொண்டாடி
மகிழ்வதில் அர்த்தமென்ன
என்ற கேள்விக்கு
சந்தர்ப்பங்கள்
பதில் தேட விடவில்லை..
புத்தாடை அணிவதிலும்
விருந்து வேடிக்கைகளிலும்
கழிந்த நாளின்
கடைசி மிச்சத்தில்
கண்ணுறங்க முயல்கையில்
உள்ளிருந்து உருளும்
மனசு
தொலைத்த இளமையையும்
கழிந்த ஆயுளையும்
எண்ணி...
No comments:
Post a Comment