Mar 29, 2009

மரணமே...

மரணமே
எவ்வளவு பெரியவன்
நீ..
எத்தனை வரலாறுகள்
உனது..
உன்னால் சிதைந்த
குடும்பங்கள் பல
அரிதாய் உன்னால்
இணைந்த குடுபங்கள் சில..
நீ பலநேரம்
தண்டனை யாகவும்
சிலநேரம்
பரிசாகவும் வருகிறாய்..
உன்னில் நிரந்தரம்
எதுவுமில்லை
நீ சாபம் மீண்டும்
நீ வரமாய்...
இலக்குகள் இல்லை
விதிகள் இல்லை
வரும் முறைகள்
தவிர்த்து எல்லோர்க்கும்
ஒன்றுதான் நீ...
பெரும்பாலும் நீ
அழையா விருந்தாளி
உன் வருகை
அழுகையில்தொடங்கி
அழுகையில் முடியும்...
நீ பெரிய கற்பனைவாதி
உன் கற்பனைகளை
பரந்த உலகத்தின்
எல்லைவரை
பரிட்சித்து அறிகிறாய்..
நீ அசிங்கமானவன்
அருவருக்கத் தக்கவன்
எனக்கும் எல்லோருக்கும்...
ஆனாலும்
அழைக்கும் பொழுது மட்டுமே
வருவதனால்
நீதான் மிக அழகு...

No comments: