உறங்க மறந்த
இமைகளின்
உள்ளிருந்து உறுத்தும்
அவள் ஏக்கம்...
பேச மறந்த
வார்த்தைகளுக்குள்
புதைந்து கிடைக்கும்
அவள் ஆசை...
சூட மறந்த
பூக்களுடன் உலர்ந்து
கிடக்கும்
அவள் உணர்வு...
தலை நீட்டும்
ஒன்றிரண்டு நரைமுடிகளில்
சிக்கித் தவிக்கும்
அவள் கனவு...
ஒப்பனை மறந்த
உருவத்தில்
ஒளிந்திருக்கும்
அவள் இளமை..
சேர்க்க மறந்த
பணம் நகையில்
தொலைந்திருக்கும்
அவள் வாழ்க்கை...
No comments:
Post a Comment