Mar 7, 2009

குழல்..

உதடுகள் ஊதிய
காற்று உள்ளிருந்து
வழியும் சுக ராகமாய்..
துளைகள் வருடி துள்ளி
நடனமாடும் விரல்கள்
ஊதுவதால் உதடுகளுக்கோ
ஊதபடுவதால் மூங்கிலுக்கோ
வருத்தமில்லை..
எல்லை மீறும் காற்றை
இலக்கணம் மாற விரல்கள்
இசைவிக்கின்றன..
உருகிவழியும் இசையில்
கருகிய இதயத்தின் செல்களிலும்
கண்திறக்கும் ஈரம்..
பெருகி வரும் இசை நதியில்
முழுகி திளைத்தாலும்
விரல்களன்றி வேறு யாரறிவார்
ஊதும் காற்றை
உயிரிசையக்கும் வித்தை..

No comments: