மாடிவீடுகளின்
மொட்டைமாடி பட்டாசுத்
தூவல்
சில கூரை வீடுகளிலும்
தெறித்தது..
கொண்டாட்டமான
இரவின் ஆரவாரங்களில்
பல விசும்பல்கள்
புலனாகவில்லை யாருக்கும்..
புது துணியுடன்
பட்டாசு வெடிக்கும்
குழந்தைகளின் எதிரே
ஆவலும் ஏக்கமும்
நிறைந்த கண்களுடன்
தெருக்களில் சில பிஞ்சுகள்..
எரிந்து கிடக்கும்
மத்தாப்பு கம்பிகளில்
எதையோ தேடும்
மத்தாப்பு விரல்கள்..
கருகிய பூச்சட்டிகளில்
எதையோ ஆராயும்
பூ விழிகள்..
கொண்டாட்டங்கள்
பொதுஉடமை ஆகாதா என
தேடியலையும் கால்கள்..
இவை பார்க்க பார்க்க
மெதுவாய் தொடங்கி
உச்சம் தொட்டது
தீபாவ(லி)...
No comments:
Post a Comment