Jun 28, 2010

பிள்ளை நிலா -2

அரிதாய் நீ பேசும்
ஒன்று இரண்டு
வார்த்தைகளில்
அடங்கிவிடுகிறது
என் மொழியின் அகராதி..
குறிப்புகளால்
செய்கைகளால்
புரியவைத்து விடுகிறாய்
உன் தேவைகளை...
உன் சிலநேர கோபங்களுக்கும்
சிலநேர சந்தோஷங்களுக்கும்
அர்த்தம் தெரியாமலே
நானும் பிரதிபலிக்கிறேன்
உன்னை..
உன் பேச்சு
கேட்க காத்திருக்கும்
மனத் தவிப்புகளை
துடைத்து விடுகிறது
நான் கேட்டதும்
நீ கொடுத்துவிடும்
முத்தங்கள்...
விதியின் வசத்தால்
விரும்பாத ஒன்று
நடந்திடினும்
அப்பொழுதும்
ஏதேனும் ஒரு மரத்தின்
வேர்களாய்
வெளி நீட்டி இருக்கும்
என் செவிகள்
உன் சொல் கேட்க.....

No comments: