தினமும் பலலட்சம்
பெண்கள் பிறந்தார்கள்
பிறப்பார்கள்
எனக்கெனவே பிறந்த
உனைப்போல்
எவருமில்லை உலகில்..
சற்று அழகான
பெண்களை கண்டு
தடுமாறும் மனது
அலையில்லா கடலானது
பெண்மையின் மகத்துவம்
உணர்ந்த நாளில்...
எதிர்பாரா காதலில்
தொடங்கி இன்று
விவாதங்களும்
சின்ன சண்டைகளோடும்
ஓடிகொண்டிருக்கிறது
நம் குடும்ப ரயில்
விஷ்வா
எனும் சினஞ்சிறு
தண்டவாளத்தின் வழியே...
நமக்கான தருணங்களை
தொலைத்து
குடும்ப பாரம் சுமக்கும்
போராளிகள்
நாம் இருவரும்...
நமது ஏமாற்றங்களை
படிக்கட்டுகளாக்கி
உச்சம் தொடுவோம்
என்றாவது வாழ்வில்...
வருடம் தோறும்
வரும் பிறந்த நாள்
கழியும் இளமையும் வயதையும்
மட்டும் சொல்வதில்லை
நம் இல்லறத்தின்
நெருக்கத்தையும் தான்........
No comments:
Post a Comment