Jul 2, 2010

மீண்டும் ஒரு தருணம்.....

மீண்டும் ஒரு தருணம்
வரலாம்
அன்று காதலோடு
நெடுநேரம்
ஒன்றை ஒன்று
விழுங்கிய நம் விழிகள்
சந்தித்துக்கொள்ள
மீண்டும் ஒரு தருணம்
வரலாம்....
மழை முடிந்த
இரவின் மிச்சத்தில்
வடியும் நீர் துளியைபோல
என் உயிரின் துளிகள்
வடியும் மிச்சத்தில்
மீண்டும் ஒரு தருணம்
வரலாம்...
நாம் நடந்த தடங்களை
அலைகள் அழித்தது
நுகர்ந்த வாசங்களை
காற்று அழித்தது
வளர்த்த காதலை
உறவுகள் அழித்தது
வடியும்
கண்ணீர் அழிக்கமட்டும்
எதுவும் வராமல் போயினும்
மீண்டும் ஒரு தருணம்
வரலாம்.......

No comments: