Jul 2, 2010

பிள்ளை நிலா - 3

முடியை பிடித்து
இழுக்க ஒன்று
முகத்தில் ஓங்கி
அடிக்க ஒன்று ...
நகத்தால் என்னை
கிழிக்க ஒன்று
நாக்கு துருத்தி
மிரட்ட ஒன்று...
கால்களால் எட்டி
மிதிக்க ஒன்று
கைகளால் கழுத்தை
நெறிக்க ஒன்று...
மொத்தம் எத்தனை
முத்தங்கள்
முடிந்தவரையில்
வாங்கிக்கொள்...

No comments: