எதோ ஒரு
தேவதையின் வரம்
நீ என் கைகளில்
வந்தது...
கூண்டில் இருந்து
விடுபட்ட ஒரு
முயல் குட்டியை போல்
நம் வீடெங்கும்
நீ துள்ளித் திரிவாய்...
உன் சந்தோஷக்
கூச்சல்கள் நம்
தெருவை நிறைக்கும்....
நீ கலைத்து வைக்காத
பொருட்கள்
உடைத்து வைக்காத
பொம்மைகள்
கிறுக்கி வைக்காத
சுவர்கள்
இவை விலக்கிப் பார்த்தால்
ஒன்றும் இல்லை
நம் வீட்டில்.......
No comments:
Post a Comment