Jul 11, 2010

நெருக்கி கிளைவிட்ட
ஆலமரத்தின்
கருப்பு விழுதைபோல
சிலநேரம்
அழகாய் நுனிமுடிந்து
அசையும் ஓவியமாய்
சிலநேரம்
சற்றே எட்டநின்று
பர்ர்கையில்
படம் விரித்தாடும்
கருநாகமாய் சிலநேரம்
என தாவணி
தேவதைகளின்
கூந்தல் கண்ட கண்களுக்கு
வெடுக் வெடுக்கென
ஆடும் ஆட்டு வாலைபோலவும்
பணக்கார வீட்டு
புசு புசு நாயின்
முடிபோலவும் தான் தெரிகிறது
பட்டணத்து பெண்களின்
கூந்தல் .....

No comments: