தாமரை ரோஜா
முல்லை மல்லி
என மனிதன் அறிகையில்
தேனை மட்டும்
அறியும் வண்டு....
=========
காற்று கலைத்தது
மழை கலைத்தது
மனிதரும் கலைத்தனர்
கட்டிக்கொண்டே தானிருக்கிறது
சிலந்தி
சொந்தமாய் ஒரு வீடு
என் வாடகை வீட்டில்......
============
குலதெய்வ கிடா வெட்டு
சொந்தங்களோடு
வயிறு முட்ட சாப்பிட்டு
மிச்சத்தை மூட்டையாக்கி
கிளம்பியாயிற்று
இன்னும் பசியோடிருந்தது
குல சாமி..
==============
No comments:
Post a Comment