Jul 25, 2010

ஆண்

தவறு செய்யும்
பிள்ளை அதட்டவும்
உன்னிடம்
அனுமதி வாங்கவேண்டும்..

இருபது வருடம்
வளர்ந்த அம்மா வீட்டில்
இரண்டு நாள் தங்க
இருபதுநாள்
மன்றாட வேண்டும்
உன்னிடம்...

உனக்காக நான்
கொட்டி சமைத்த
அன்பில் துளியேனும்
மிச்சமிருந்ததில்லை
நீ சாப்பிட்ட
எச்சில் தட்டில்...

விருந்து சாப்பிட்டவனுக்கு
இலை சாப்பிட்டதா
என என்ன கவலை
என்று
நீ திரும்பி உறங்கும்
நாட்களில்
எனக்காக அழ
கண்ணீர் இருந்ததில்லை
ஏனெனில்
அடக்கி வைக்கப்பட்ட
என் நிராசைகளும்
அடக்கவே முடியாத
உன் பெரும் கோபமும்
தினமும் வெளிப்படுவது
என் கண்களில்
இருந்து தானே...?

No comments: