Sep 21, 2010

மரணப் பேச்சு..

மரணம் தின்று விடுகிறது
மனிதர்களை
ஏதனும் ஒரு தினத்தில்
எதோ ஒரு விதத்தில்...

பேசிப் பேசி அலுத்துப்போன
உதடுகள்
மறுபடியும் ஆரம்பிக்கின்றன
மரணம் பற்றிய பேச்சை
சற்றே சோகம் கலந்த
சுவாரசியத்துடன்
மற்றுமொரு மரணத்தின்
நிகழ்வில்...

எட்டி தொட்டுவிடும் தூரத்தில்
எல்லோர் பின்னும்
காத்திருக்கிறது மரணம்
தெரிந்தும் தெரியாததுபோல்
பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்
அழுகையுடனும்
வருத்ததுடனும்
சில நேரங்களில் சிரிப்புடனும்
மரணத்தை...

No comments: