Sep 26, 2010

அந்த நதியின்
கரை வழியே
வந்து விழுந்தது
ஒரு பறவை
ஒற்றை சிறகுடன்...
வழியும்  குருதியின்
சிவப்பும்
வலியின் வேதனை
சொல்லும் கண்களும்
தேடின
வருடும் கரங்களை...
மரணத்தின் துடிப்பை
காண சில கண்கள்
ரதத்தின் வாசம்
நுகர சில நாசிகள்
உயிரின் துடிப்பை
கேட்க சில செவிகள்
ஆனால்
வருடும் கைகள்
வராததைக் கண்டு
மெல்ல எழுந்து
பறந்தது பறவை
உடலை விட்டு
கைகள் தேடி...

No comments: