தனிமையும் நீயும்
அருகிருந்த பொழுதுகளில்
என்னைச் சுற்றி நடந்த
எதுவும் தெரிந்ததில்லை...
உன்னையும் என்னையும்
சுற்றியே
உலகம் சுழலுவதை
கண்டறிந்து
காதல் அறிவியல்
படித்த தினங்கள் அவை..
நாளின் கடைசி
நிமிடங்கள் வரை
உன் காதல் தேடியே
அலைந்து திரிந்தோம்
நானும் என் காதலும்...
முகம் பார்க்கும்
கண்ணாடியும்
ஜன்னல்களும் கூட
புகைப்படத்தின் சட்டமாய்
மாறி உன்னை மட்டுமே
காட்டிய தருணங்கள் அவை..
உன் தாவணி நிறத்தில்
வானமும்
நகப்பூச்சு நிறத்தில்
நிலவும் நட்சத்திரங்களும்
தெரிந்தன அன்று..
நிஜங்களின் முடிசுகளில்
கனவுகள் கரைந்துபோன
இன்றைய தினத்தில்
எப்பொழுதேனும் வருவதுண்டு
அரிதாய் நீ வரும் கனவு
மனைவி குழந்தை
அணைத்து உறங்கும் இரவில்...
யாரை முத்தமிட்டேன்
என்ற குழப்பத்தில்
விடிந்திருக்கும் என் இரவு...
No comments:
Post a Comment