ஒருநாளேனும்
நம் வீட்டின்
விசேஷ தினங்களில்
பூஜை முடியும் வரை
விட்டுவைத்ததில்லை
பதார்த்தங்களையும்
பழங்களையும் நீ...
சாமி பதார்த்தம்
எச்சில் பண்ணகூடாது
என்று உதடுகள்
உன்னை அதட்டினாலும்
சாமியே வந்து
சாப்பிடுவதாய் நிறையும்
எங்கள் மனது...
No comments:
Post a Comment