Oct 16, 2010

பிள்ளை நிலா -8

உன் கைகள் பிடித்து
மெல்ல நுழைந்துவிட்டேன்
உன் உலகத்தில்...
நீ அழ நான் அழவும்
நீ சிரிக்க நான் சிரிக்கவும்
என் சுயம் மறந்து
நான் நீயானேன்...
உன் பால் வாசம்தரும்
உதடுகளும்
பசுந்தளிர் கரங்களின்
அரவணைப்பும்
நான் இப்படியாகவும்
நீ குழந்தையாகவும்
இருந்துவிட ஏங்கும்...
அப்பா என்ற
உன் ஒருவார்தைக்கு
ஆயிரம் அர்த்தங்கள்
அதன் அர்த்தங்களில்
நகரும்
எங்கள் வாழ்க்கைச்சக்கரம்
அதன் அச்சாணி நீ..

No comments: