Oct 17, 2010

புதுமை செய்து கண்டதென்ன

அன்று
சந்தனமும் குங்குமமும்
 இருந்த இடத்தை
சாட்சி சொல்லும் இன்று
பாம்பும் தேளும்...

மையிட்ட கண்ணுக்கு                             
மஸ்காரா வந்தாச்சு                           

மருதாணி விரல்களிலோ                    
நெயில் பாலிஷ் பூச்சு...   
                                                                      
மஞ்சள் பூசும்                                          
காலமின்று மலையேறியாச்சு            
மாத்தி மாத்தி பூசிக்கொள்ள               
ஆயிரம் முகப்பூச்சு....
                           
 கணுக்கால்  மேல் ஏற                            

அன்று                                                 
பட்டு பாவாடை பதறும்                        
இன்று                                                        
இன்னும் இறக்கசொல்லி                      
இடுப்பு ஜீன்ஸ் கதறும்...

தேனாய் பேசியவள்
ஐ பாடாய் அலறுகிறாள்
குயிலாய்  கூவியவள்
 ரிங் டோனாய் மிரட்டுகிறாள்....

கோவை பழ உதடு எங்கும்
லிப் சைனர் மின்னும்
கோதையவள் காதுகளில்
கைவளையல் தொங்கும்...

 இயற்கையா செயற்கையா
இவள் கூந்தல் நறுமணம்
என்று தீமானிக்கபட்டது
அன்று
பாண்டியன் சபையில்
இன்று 

பாண்டிபஜார் கடையில்.....

நெய்விலக்காய் ஒளிரும்
அழகை நிறம் மாற்றி
மறைத்தாய் பெண்ணே..
பொய்விளக்கின் வெளிச்சத்தில் 
நீ புதுமை செய்து
கண்டதென்ன...

No comments: