திறக்க நினைத்தும்
முடியவில்லை கண்கள்...
பிரிக்க நினைத்தும்
முடியவில்லை உதடுகள்...
கழுத்து இறுக பற்றிக்கொண்ட
விரல்களின் வழியே
வழிந்தோடிய மின்சாரம்
கருக்கியது
உயிரின் வேர் வரை....
நெடுநேரம்வரை
நடக்கமுடியாமல்
நடை பின்னிய கால்கள்
கட்டுபாடின்றி துடித்து
மத்தளம் கொட்டிய இதயம்...
ஒன்றை ஒன்று
பார்க்க தவிர்த்து
பின் பார்த்த நொடிகளில்
வெட்கம் கலந்து
நிலம் வீழ்ந்த கண்கள்
என
எப்பொழுது நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை
அந்த முதல் முத்தம்....
No comments:
Post a Comment