Nov 15, 2010

என்ன சொல்லி தேற்றிஇருப்பாய் நீ

விதி பிரித்துவைத்த 
ஒரு தருணத்தில்
விட்டு விலகிப்போனோம்
இருவரும்
வெகு தூரம் அன்று.....

உனது திருமணமும்
எனது  திருமணமும்
மெல்ல அழித்துவிட்டதாய்
கற்பனை செய்துகொண்ட
அந்த காதலின் பதிவுகள்
மெல்ல எட்டிப்பார்க்கும்
இதயம் துளைத்து
நெஞ்சுக் கூடு தாண்டியும்
வலியோடு நெருஞ்சி முள்ளாய்
இன்றும எதிர்பாராமல்
நீ எதிர் வரும் தருணங்களில்....

தெரிஞ்சவங்க என்று
ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திய
தருணங்களில்
என்ன சொல்லி
தேற்றிஇருப்பாய் நீ
புன்னகைக்க நினைத்து
தோற்ற உதடுகளையும்
கண்ணீர் இல்லாமலே
அழுத கண்களையும்.....?

No comments: