Jul 25, 2011

ஒன்றும் புரியாமல்

உள்ளிருந்து
உருளும் வார்த்தைகள்
ஒன்றும் புரியாமல் தவிக்கும்
உதடுகளுக்குள்...
உன்னை தேடி தவித்த
கண்கள்
ஒன்றும் புரியாமல் தேடும்
காதலை மண்ணில்...
உன்னை மட்டும்
சுவாசித்த மூச்சும்
உனக்காக மட்டுமே
 துடித்த இதயமும்
நின்று போகும்
அந்த கணங்கள்
நீ என் அருகில் இருக்கும்
நிமிடங்கள்...

No comments: