Aug 15, 2011

மாமி கட்டிவைக்கும்
மல்லிப்பூ சரமும்
போச்சு..
மாமா வாங்கித்தந்த
மஞ்சள் ரிப்பன்
ரெண்டும் போச்சு..
அம்மா போட்டுவிடும்
அழகு ரெட்டை
ஜடையும் போச்சு..
அக்கா போட்டுவிடும்
அருமை குதிரை
வாலும் போச்சு..
பள்ளிக்கூடம் நான்
போனா பசங்களெல்லாம்
கொட்டு வாய்ங்க...
பார்க்கும் தோழிகளெல்லாம்
பரிகாசம் செய்வாங்க..
சாமிக்கு தரனும்ம்னு
சொல்லி ஒரு
சதிகாரன் மொட்ட போட்டான்
உயிர காக்கும் சாமி
மயிர வாங்கி என்ன செய்யும் ....?

No comments: