Aug 15, 2011

மனித குணம்....
********************
அனல்வீசும்
இரவுகளில் எல்லாம்
புழுக்கத்தில் நெளியும்
மனிதர்கள்
திறந்துவைத்தே
தூங்க முயல்வார்கள்
கதவு ஜன்னல்களை
காற்றையும் வெயிலையும்
சபித்தபடி...

எதிர்பாராத ஓர்நாளில்
இருளை கிழித்து
இறங்கும் மழை..
ஜன்னல் தட்டி
அழைக்கும் சாரலையும்
கதவு தட்டி
அழைக்கும் காற்றையும்
சபித்தபடி
மறுபடியும்
உறங்கப்போவர்கள்
மனிதர்கள்...

No comments: