சுத்தமாய் பெருக்கிவை
கொடி ஏற்றும்மிடத்தை
சுதந்திரதினம்
வந்துவிட்டது...
நட்டநடுவில் மேடையிடு
நான்கு வீதிகளில்
தோரணம் கட்டு
ஊரே பார்க்க
உயர்வாய் கொண்டாடு
சுதந்திரதினத்தை....
நாடி தளர்ந்த
தியாகி கிழவன்
வேட்டின்றி அம்மணமாய்
கிடப்பான் குடிசைக்குள்
அவன் வேண்டாம்...
கோடிகள் குவிந்த
அரசியல் புள்ளியை பிடி
அவன்தான் வேண்டும்
கொடியேற்ற...
நெட்ட நெடுங் கொடிமரத்தில்
கொடியேற்றம்
நிரப்பிவைத்த மலர்களில்
சில விழலாம்
உன் தலையிலும்
வாழ்த்தி பாடு
வாழ்த்தி பேசு
வாங்கிகொள் மறக்காமல்
உனக்கான மிட்டாயை...
யாருமில்லா தனிமையில்
படபடக்கும் தேசியக்கொடி
வெட்கத்துடன் அந்தரத்தில்
வீட்டுக்கு புறப்படு
விழா முடிந்தது....
வீட்டுக்கு செல்லும்
வழியில் மறக்காமல்
நக்கிகொள் உள்ளங்கையை
பின்னாளில் யாரேனும்
சுதந்திரம் எப்படியிருக்கும்
என்று கேட்டால்
இனிக்கும் என்று சொல்ல.........
கொடி ஏற்றும்மிடத்தை
சுதந்திரதினம்
வந்துவிட்டது...
நட்டநடுவில் மேடையிடு
நான்கு வீதிகளில்
தோரணம் கட்டு
ஊரே பார்க்க
உயர்வாய் கொண்டாடு
சுதந்திரதினத்தை....
நாடி தளர்ந்த
தியாகி கிழவன்
வேட்டின்றி அம்மணமாய்
கிடப்பான் குடிசைக்குள்
அவன் வேண்டாம்...
கோடிகள் குவிந்த
அரசியல் புள்ளியை பிடி
அவன்தான் வேண்டும்
கொடியேற்ற...
நெட்ட நெடுங் கொடிமரத்தில்
கொடியேற்றம்
நிரப்பிவைத்த மலர்களில்
சில விழலாம்
உன் தலையிலும்
வாழ்த்தி பாடு
வாழ்த்தி பேசு
வாங்கிகொள் மறக்காமல்
உனக்கான மிட்டாயை...
யாருமில்லா தனிமையில்
படபடக்கும் தேசியக்கொடி
வெட்கத்துடன் அந்தரத்தில்
வீட்டுக்கு புறப்படு
விழா முடிந்தது....
வீட்டுக்கு செல்லும்
வழியில் மறக்காமல்
நக்கிகொள் உள்ளங்கையை
பின்னாளில் யாரேனும்
சுதந்திரம் எப்படியிருக்கும்
என்று கேட்டால்
இனிக்கும் என்று சொல்ல.........
No comments:
Post a Comment