Aug 15, 2011

அழாதே...

அழாதே
உன் ஈர விழியின்
பாரம் சுமக்க
திணறுகிறது நெஞ்சம்..
உன் கண்ணீரின்
வீரியத்தில்
கதறுகிறது உள்ளம்
அழாதே...
காலம் உன்னை
அழவைத்ததோ
இல்லை
காதல் உன்னை
அழவைத்ததோ...
உன் ஈரக் கன்னங்கள்
கண்டபின் இதயமும்
ரத்தம் கசிகிறது
அழாதே....
என் பத்து விரல்களும்
மொத்தமாய்
உன் கண்ணீர்
ஒற்றியபின்னும்
இன்னும் அழத்
தோன்றினால் சொல்
என் உயிரெடுத்து
தருகிறேன்
உன் கண்ணீர் ஒற்றிக்கொள்ள
அழாதே....

No comments: