Aug 20, 2011

வார்த்தைகளும் கவிதைகளும் ........


எனக்குள் தான்
ஒளிந்திருக்கின்றன
என் கவிதைகளுக்கான
வார்த்தைகள்
இங்கோ அங்கோ
எங்கோ இருக்கின்றன....

எதைப்பற்றி
யாரைப்பற்றி
என்ற தேடல்களுக்கு
பலநேரங்களில் அவைகள்
பிடிகொடுப்பதே இல்லை...

ஒன்றும் தோன்றாத
வெறுமைகள்
சிலநேரங்களில்
கவிதையாவதும் உண்டு...
எழுதத் தூண்டும்
தருணங்கள்
 நொடிகளில்
வெறுமையவதும் உண்டு...

எனக்கும்
வார்த்தைகளுக்கும்
நடக்கும் கண்ணாமூச்சி
முடிவில்
என்னிடம் வார்த்தைகளோ
வார்த்தைகளிடம் நானோ
பிடிபட்டிருப்போம்.....

எனக்குள் தான்
ஒளிந்திருக்கின்றன
என் கவிதைகளுக்கான
வார்த்தைகள்
இங்கோ அங்கோ.....

No comments: