வேறு வேலை
மாறவில்லையா எனும்
நண்பனுக்கும்..
ஏன் இதே வேலையில்
நிறைய வருடம் தொடர்ந்தாய்
என கேட்கும்
நேர்காணல் செய்பவனுக்கும்
எப்படி புரியவைப்பது
முப்பது வருடங்களாய்
ஒருத்திக்கு மகனாகவும்
ஆறு வருடங்களாய்
ஒருத்திக்கு கணவனாகவும்
ஐந்து வருடங்களாய்
ஒருவனுக்கு தந்தையாகவும்
நான் தொடர்ந்துகொண்டே
இருப்பதை............?
மாறவில்லையா எனும்
நண்பனுக்கும்..
ஏன் இதே வேலையில்
நிறைய வருடம் தொடர்ந்தாய்
என கேட்கும்
நேர்காணல் செய்பவனுக்கும்
எப்படி புரியவைப்பது
முப்பது வருடங்களாய்
ஒருத்திக்கு மகனாகவும்
ஆறு வருடங்களாய்
ஒருத்திக்கு கணவனாகவும்
ஐந்து வருடங்களாய்
ஒருவனுக்கு தந்தையாகவும்
நான் தொடர்ந்துகொண்டே
இருப்பதை............?
No comments:
Post a Comment