ஏறத்தாழ
எல்லா தேசங்களுமே
சூழப்பட்டுள்ளது
உன் வெள்ளைத் தோலால்...
உன் விரல்கள்
சுரண்டிக்குவிக்கும்
பிற தேசங்களின்
வளங்களை
உன் உதடுகள்
உறிஞ்சிக்குடிக்கும்
அதன் எண்ணெய்
வளங்களை.....
தந்திரமாய் காய்நகர்த்தி
காரியம் செய்வதில்
நீ நரி
வஞ்சகமாய் ஏய்த்து
பொருள் சேர்ப்பதில்
நீ எலி...
பெயர் தெரியா
கொடூர ஆயுதங்கள்
கோடி உண்டு உன்னில்
பிறர் குண்டூசி
வைத்திருக்க கூட
உன் அனுமதி வேண்டும்
இந்த மண்ணில்.........
உன் சிப்பாயை
சிறைஎடுத்தாலே
பற்றிஎரியும் தேசங்கள்
உலகில்
ஆனால் பிற நாட்டின்
ஜனாதிபதிகளை கூட
அம்மணமாக்கி சோதிக்கும்
அதிகாரம் உண்டு
உன் தலையில்...
உறவை பகையாக்கி
பகையை உறவாக்கும்
உன் தேவைகள்
ஆடிக்கொள் அடக்கமாகும்வரை
வரலாற்றின் பக்கங்களில்
எதுவும் திருத்தி
எழுதப்படலாம் நாளை.......
எல்லா தேசங்களுமே
சூழப்பட்டுள்ளது
உன் வெள்ளைத் தோலால்...
உன் விரல்கள்
சுரண்டிக்குவிக்கும்
பிற தேசங்களின்
வளங்களை
உன் உதடுகள்
உறிஞ்சிக்குடிக்கும்
அதன் எண்ணெய்
வளங்களை.....
தந்திரமாய் காய்நகர்த்தி
காரியம் செய்வதில்
நீ நரி
வஞ்சகமாய் ஏய்த்து
பொருள் சேர்ப்பதில்
நீ எலி...
பெயர் தெரியா
கொடூர ஆயுதங்கள்
கோடி உண்டு உன்னில்
பிறர் குண்டூசி
வைத்திருக்க கூட
உன் அனுமதி வேண்டும்
இந்த மண்ணில்.........
உன் சிப்பாயை
சிறைஎடுத்தாலே
பற்றிஎரியும் தேசங்கள்
உலகில்
ஆனால் பிற நாட்டின்
ஜனாதிபதிகளை கூட
அம்மணமாக்கி சோதிக்கும்
அதிகாரம் உண்டு
உன் தலையில்...
உறவை பகையாக்கி
பகையை உறவாக்கும்
உன் தேவைகள்
ஆடிக்கொள் அடக்கமாகும்வரை
வரலாற்றின் பக்கங்களில்
எதுவும் திருத்தி
எழுதப்படலாம் நாளை.......
No comments:
Post a Comment