Aug 20, 2011

மழைப்பூச்சி



சிறுவயதில்
மழைப்பூச்சியை பிடித்து
எந்தப்பக்கம்
மழைவருமென்று கேட்டதுண்டு
மழைகாலங்களில்.......
தொலைக்காட்சியின்
வானிலை அறிக்கை
போல இல்லாமல்
மழை பெய்துவிடுவதும் உண்டு
சிலநேரங்களில்
அது கைகாட்டிய திசையில்...
மரங்கள் இருந்த
இடங்களில் இன்று
பூத்து குலுங்குகின்றன
கான்கிரீட் காடுகள்.....
ஏதேனும் ஒரு
கட்டிடத்தின் அடியில்
வாய்பிளந்து கிடக்கக்கூடும்
செத்துப்போன மழைப்பூச்சி
இன்றும் ஒரு
மழைத்துளிக்காக...

No comments: