Aug 28, 2011

பேராசையின் நாக்குகள்
எல்லா தேசங்களின்
வரைபடங்களின் மீதும்
ஊர்ந்துகொண்டிருக்கின்றன....
வெடிமருந்துகளின் துகள்கள்
சுவாசத்தில் புகுந்து
ஆதிக்க வெறி ஏற்றுகின்றன
ரத்தத்தில்...
ஒரு தேசத்தின்
சமாதியிலிருந்து எழுப்பப்படுகிறது
இன்னொரு தேசத்தின்
படிக்கட்டுகள்....
களங்கள் காரணங்கள்
வேறாகவும் நோக்கம்
ஒன்றாகவும் இருக்கிறது
யுத்தத்தில்...
பூமியின் ஒருகோடியில்
புதைக்கப்படும் வன்முறை
அதன் மறுகோடியில்
முளைக்கிறது  வேறுபெயரில்....

No comments: