உனதும் எனதுமான
காமம் தளும்பாதவரையில்
கற்பென்பது நிச்சயம்
கண்ணியப் பொருள்தான்..
தலும்பிவிடிலோ
அது கற்பனைப்பொருள்...
இதுதான் கற்பென்றும்
இதெல்லாம் கற்பென்றும்
நியதிகளில்லை..
சிலநேரங்களில் கற்பென்பது
சுவைத்தபின்னரே கரிக்கும்
உப்பைபோல்...
கற்பில் பெண்ணின்
எல்லைகள்
அடிகள் தோறும்
ஆணின் எல்லைகள்
அபூர்வமானது அதுகூட
அளிக்கப்படலாம்
தேவைகளுக்கு...
கற்பென்பது விற்கப்படலாம்
கடைப்பொருளாய்
அல்லது அடைக்கப்படலாம்
காட்சிப்பொருளாய்
அதுவரையில் பேசித்தீர்ப்போம்
கற்பென்பது
அதுவா இதுவாவென.....
No comments:
Post a Comment