Aug 28, 2011

ஜா( தீ)...

எத்தனை காலத்திற்கு
பின்னும் எங்கேனும்
ஒளிந்திருக்கிறது அது..

சிலரிடம் பகையாகவும்
சிலரிடம் பாசமாகவும்
சிலரிடம் அன்பாகவும்
சிலரிடம் அருவெறுப்பாகவும்
வெளிக்காட்டப்படுகிறது
அது....

சிலரிடம் சிரிப்பாகவும்
சிலரிடம் அழுகையாகவும்
வெளிப் படுத்தப்படுகிறது
அது...

சிலருக்கு அது சாமி
சிலருக்கு அது சாத்தான்
சிலருக்கு அது சட்டை
சிலருக்கு அது சம்பாத்தியம்....

எத்தனனை முறை
அழித்தாலும் வீதிகள்
தோறும் எரிந்து
எரிந்துகொண்டேயிருக்கிறது
அது ஜாதீ....

சிலர் அதை
அணைக்கவும்
பலர் அதை
அணைத்துக்கொள்ளவும்
செய்கின்றனர்....

No comments: