மழையின் குழல்கள்
வாசிக்கின்றன
மேகத்தின் துளைகளில்
வழிந்தோடி வருகிறது
இசை...
தூங்கும் மணற்பரப்பை
தட்டி எழுப்பி
விளையாட அழைக்கின்றன
மழைத் துளிகள்
இரு கைகள் குவித்து
அடைத்துவைத்தேன்
மழைத்துளிகளை...
விட்டுவிடச் சொல்லி
கெஞ்சுகிறது என்
கால்கள் சூழ்ந்துகொண்ட
மழை நீர்...
மழையின் முட்கள்
ஓடிக்கொண்டே இருக்கின்றன
மணிகாட்ட மறைந்துபோயின
கடிகாரங்கள்....
குடையும்
செருப்பும்
சண்டையிட்டு கொண்டிருக்கின்றன
யார் மழையிடம்
நெடுநேரம்
உறவாடியதென்று....
No comments:
Post a Comment