(21 )
மழையின் அழுத்தத்தை
மண்ணும்
மண்ணின் ஸ்பரிசத்தை
மழையும்
நினைக்கத் தொடங்கும்
கணங்களில்
தொடங்கி விடுகிறது
மலைக்கும் மண்ணுக்குமான
முதல் உறவு....
(22 )
காற்று கொய்து
வீசிய பூக்களில் எல்லாம்
ஒட்டியிருந்து உறவாடும்
மண்ணின் துகள்களை
கழுவித் துடைக்கும்
மழையின் துளிகள்....
(23 )
நெளிந்தும் வளைந்தும்
ஓடும் மழைநீர்
எடுத்து அப்பிக்கொள்கிறது
சிவப்பு மஞ்சள்
பழுப்பு என
மண்ணின் வர்ணங்களை...
மழை களவாடிய
நிறங்கள் திரும்பக்கேட்டு
ஓடிச்செல்லும் மணல்
மழையின் பின்னே........
(24 )
பணி முடிந்து
வீடு திரும்பிய
ஒரு மழை இரவில்
வண்டியின் சன்னல்களை
முழுவதுமாய்
மூடச்சொன்னாள் ஒருத்தி...
சற்றே திறக்கச்சொன்னாள்
வேறொருத்தி...
சத்தம்போடாமல் இருக்கச்சொன்னது
தட் தட் என
வண்டியின் மேல் விழுந்த
மழை.....
(25)
மழையின் குஞ்சுகள்
முழுதாய் மூடியிருந்தன
வண்டியின் கண்ணாடிகளை...
மேலும் கீழும்
வலமும் இடமுமாய்
அசைந்து மழையை
துடைக்கப் போராடியது
ஒரு கருவி...
கண்ணாங் குழியிலிருந்து
இறங்கி
தெருவில் அலைந்தன
சாலையை தேடி
வண்டிக்காரனின் கண்கள்.....
(26 )
மழையும் நீரும்
வாழ்ந்த குளங்களை
நிறைத்து வீடு கட்டினான்
மனிதன்..
மழை நாட்களில்
குடிபுகுந்தது மழை
வீட்டுக்குள் வெள்ளமாய்...
(27)
மழை நாட்களில்
சாலையை கடந்துபோகும்
துப்பட்டா பெண்
வானவில்லை மறைத்துவிடுகிறாள்
துப்பட்டவினால்....
வானவில்லோடு
மழையையும் மறைத்துவிடுகிறாள்
துப்பட்டா இல்லாத பெண்.....
(28 )
மேகம் மண்ணில்
தெளித்து வைத்திருக்கும்
மழைத் துளிகளை...
எவனோ ஒரு
அவசரத்தில் பிறந்தவனின்
வண்டிச் சக்கரங்கள்
என்மேல் தெளித்துவிடுகின்றன....
(29 )
மழைக்கு
வசைகளும் வாழ்த்துகளும்
எப்பொழுதும் ஒன்றுதான்
வசைகளுக்கு அறையாகவும்
வாழ்த்துக்களுக்கு
பூத்தூவலாகவும்
தலைகாட்டிவிடுகிறது
மழை....
(30 )
ஒன்று
இரண்டு
மூன்று என
நான் எண்ணி
எடுப்பதற்குள்
திருடிக்கொள்கிறது
மணல் மழைத்துளிகளை....
(31)
காற்று முட்டித் தள்ள
தட தடக்கும்
ஜன்னல்கள்...
வெளியில்
நாட்டியமாடத் தொடங்கின
மழைத்துளிகள்...
(32)
இரவு முழுவதும்
கதவைத்
தட்டிக்கொண்டே இருந்தது
மழை
ஏதோ தருவதற்கு....
காலையில் கதவு
திறந்தேன்
கொட்டிக்கிடந்தன கவிதைகள்
மழைத் துளிகளுக்குள்...
(33 )
மழையை நான்
மனதாரக் காதலிக்கிறேன்
எனக்கான வார்த்தைகளை
தெளித்துவிட்டு போகிறது
மழை
என் ஜன்னல்களில்...
(34 )
நடக்கமுடியா சிறுவன்
வெறித்துக்கொண்டிருந்தான்
மழையை ஜன்னலுக்குள்..
வெளியில்
நடந்துபோய்க் கொண்டிருந்தன
அவன் கால்கள்
(35 )
அவள் கொலுசிலிருந்து
விழுந்த ஒரு முத்தை
எடுத்துச் சென்றது
வானம்
அதை ஒரு கோடியாய்
திரும்பித் தந்தது
மழை.....
(35 )
மழை பெய்யும்
நாட்களில் குடை பிடிப்பதில்லை
மரங்கள்...
மரங்களே குடைகளாய்
மாறின மனிதனுக்கு...
(36)
சமயத்தில் சுடும்
சமயத்தில் குளிரும்
மனதிற்கேற்ப
மாறிவிடத் தெரியும்
மழைக்கு...
(37 )
பூமி முகம் துடைத்துக்கொள்ள
மேகம் கொண்டுவந்தது
காற்று ...
அதை பிழிந்து
முகம் கழுவிக்கொள்கிறது
பூமி...
(38 )
கதவு ஜன்னலடைத்து
உட்கார வைத்துவிட்டாள்
அம்மா
வெளியே மழைத்துளிகள்
பொறுக்கிக் கொண்டிருந்தது
குழந்தை...
(39 )
மழைபெய்யும் நாட்களில்
மழைத்துளிகள் பட்டு
பணியும் மேல் இலை
கீழ் இலை
உரசிச் சொல்லும்
கதை கதையாய்
மழையின் காதலை....
(40 )
மழையின் உதடுகள்
பேசிக்கொண்டே
இருக்கின்றன இன்னும்...
கேட்டுக் கொண்டிருக்கின்றன
எல்லோர் கண்களும்...
மழையின் அழுத்தத்தை
மண்ணும்
மண்ணின் ஸ்பரிசத்தை
மழையும்
நினைக்கத் தொடங்கும்
கணங்களில்
தொடங்கி விடுகிறது
மலைக்கும் மண்ணுக்குமான
முதல் உறவு....
(22 )
காற்று கொய்து
வீசிய பூக்களில் எல்லாம்
ஒட்டியிருந்து உறவாடும்
மண்ணின் துகள்களை
கழுவித் துடைக்கும்
மழையின் துளிகள்....
(23 )
நெளிந்தும் வளைந்தும்
ஓடும் மழைநீர்
எடுத்து அப்பிக்கொள்கிறது
சிவப்பு மஞ்சள்
பழுப்பு என
மண்ணின் வர்ணங்களை...
மழை களவாடிய
நிறங்கள் திரும்பக்கேட்டு
ஓடிச்செல்லும் மணல்
மழையின் பின்னே........
(24 )
பணி முடிந்து
வீடு திரும்பிய
ஒரு மழை இரவில்
வண்டியின் சன்னல்களை
முழுவதுமாய்
மூடச்சொன்னாள் ஒருத்தி...
சற்றே திறக்கச்சொன்னாள்
வேறொருத்தி...
சத்தம்போடாமல் இருக்கச்சொன்னது
தட் தட் என
வண்டியின் மேல் விழுந்த
மழை.....
(25)
மழையின் குஞ்சுகள்
முழுதாய் மூடியிருந்தன
வண்டியின் கண்ணாடிகளை...
மேலும் கீழும்
வலமும் இடமுமாய்
அசைந்து மழையை
துடைக்கப் போராடியது
ஒரு கருவி...
கண்ணாங் குழியிலிருந்து
இறங்கி
தெருவில் அலைந்தன
சாலையை தேடி
வண்டிக்காரனின் கண்கள்.....
(26 )
மழையும் நீரும்
வாழ்ந்த குளங்களை
நிறைத்து வீடு கட்டினான்
மனிதன்..
மழை நாட்களில்
குடிபுகுந்தது மழை
வீட்டுக்குள் வெள்ளமாய்...
(27)
மழை நாட்களில்
சாலையை கடந்துபோகும்
துப்பட்டா பெண்
வானவில்லை மறைத்துவிடுகிறாள்
துப்பட்டவினால்....
வானவில்லோடு
மழையையும் மறைத்துவிடுகிறாள்
துப்பட்டா இல்லாத பெண்.....
(28 )
மேகம் மண்ணில்
தெளித்து வைத்திருக்கும்
மழைத் துளிகளை...
எவனோ ஒரு
அவசரத்தில் பிறந்தவனின்
வண்டிச் சக்கரங்கள்
என்மேல் தெளித்துவிடுகின்றன....
(29 )
மழைக்கு
வசைகளும் வாழ்த்துகளும்
எப்பொழுதும் ஒன்றுதான்
வசைகளுக்கு அறையாகவும்
வாழ்த்துக்களுக்கு
பூத்தூவலாகவும்
தலைகாட்டிவிடுகிறது
மழை....
(30 )
ஒன்று
இரண்டு
மூன்று என
நான் எண்ணி
எடுப்பதற்குள்
திருடிக்கொள்கிறது
மணல் மழைத்துளிகளை....
(31)
காற்று முட்டித் தள்ள
தட தடக்கும்
ஜன்னல்கள்...
வெளியில்
நாட்டியமாடத் தொடங்கின
மழைத்துளிகள்...
(32)
இரவு முழுவதும்
கதவைத்
தட்டிக்கொண்டே இருந்தது
மழை
ஏதோ தருவதற்கு....
காலையில் கதவு
திறந்தேன்
கொட்டிக்கிடந்தன கவிதைகள்
மழைத் துளிகளுக்குள்...
(33 )
மழையை நான்
மனதாரக் காதலிக்கிறேன்
எனக்கான வார்த்தைகளை
தெளித்துவிட்டு போகிறது
மழை
என் ஜன்னல்களில்...
(34 )
நடக்கமுடியா சிறுவன்
வெறித்துக்கொண்டிருந்தான்
மழையை ஜன்னலுக்குள்..
வெளியில்
நடந்துபோய்க் கொண்டிருந்தன
அவன் கால்கள்
(35 )
அவள் கொலுசிலிருந்து
விழுந்த ஒரு முத்தை
எடுத்துச் சென்றது
வானம்
அதை ஒரு கோடியாய்
திரும்பித் தந்தது
மழை.....
(35 )
மழை பெய்யும்
நாட்களில் குடை பிடிப்பதில்லை
மரங்கள்...
மரங்களே குடைகளாய்
மாறின மனிதனுக்கு...
(36)
சமயத்தில் சுடும்
சமயத்தில் குளிரும்
மனதிற்கேற்ப
மாறிவிடத் தெரியும்
மழைக்கு...
(37 )
பூமி முகம் துடைத்துக்கொள்ள
மேகம் கொண்டுவந்தது
காற்று ...
அதை பிழிந்து
முகம் கழுவிக்கொள்கிறது
பூமி...
(38 )
கதவு ஜன்னலடைத்து
உட்கார வைத்துவிட்டாள்
அம்மா
வெளியே மழைத்துளிகள்
பொறுக்கிக் கொண்டிருந்தது
குழந்தை...
(39 )
மழைபெய்யும் நாட்களில்
மழைத்துளிகள் பட்டு
பணியும் மேல் இலை
கீழ் இலை
உரசிச் சொல்லும்
கதை கதையாய்
மழையின் காதலை....
(40 )
மழையின் உதடுகள்
பேசிக்கொண்டே
இருக்கின்றன இன்னும்...
கேட்டுக் கொண்டிருக்கின்றன
எல்லோர் கண்களும்...
No comments:
Post a Comment