ஊருக்கு வெளியே
யாருமற்ற தனிமையில்
கருவேலம் புதர்கள்
சூழ
நிற்கும் அந்த
ஒத்தை பனைமரம்...
பயத்துடனே கடந்து
கடந்துபோவோம் அதை
பள்ளிக்கூட நாட்களில்...
தூக்குமாட்டி செத்துப்போன
யாரோ அங்கு
பேயாய் உலவுவதாய்
ஒரு பீதி
நிலவியது அந்நாளில்...
உச்சி வேளைகளிலோ
தனியாகவோ
யாரும் கடந்ததில்லை
அதை ஒருநாளும்....
தனியே சென்று
ஒத்தை பனைமரம்
தொட்டுவந்தால்
ஒத்தை ரூபாய்
பரிசென்று
பந்தயமிட்டுக் கொண்டதுண்டு
நாங்கள்....
சற்றே தைரியம் கூடிய
விடலை பருவத்தில்
ஒருநாள்
அவர்களிருவரையும்
அந்த ஒத்தை பனைமர
புதரில்
பார்க்காதவரையில்....
பேய் உலவியதாகவே
நம்பிக் கொண்டிருந்தேன்
நானும்நெடுநாட்கள் வரை
தனிமை தேடிய
யாரோ சிலரின்
காதலோ காமமோ
உலவியதென்பது தெரியாமல்.......
No comments:
Post a Comment