உன்னைத் தேடியலைந்த
கண்கள்
மூடிக் கொண்டன
முழுதாய்...
உன்குரல் கேட்டலைந்த
காதுகள்
சலனமறியா நிசப்தத்தின்
மடியில்...
உன் பெயர்
சொல்லித்திரிந்த
வாய்
வார்த்தைகளில்லா
மௌனத்தில்...
உன் கைபிடித்து
வந்த கைகளும்
உன் கால் தொடர்ந்த
என் கால்களும்
இதோ கட்டப்பட்டன
அசைவின்றி...
எவரும் உணராவண்ணம்
இன்னும் துடிக்கிறது
என் இதயம்
உனக்காக...
மூடிய இமைகளுக்குள்
தேடியலைகின்றன
விழிகள் உன்
பிம்பத்தை...
உனக்கான வார்த்தைகள்
உதடுகளுக்குள்
தேங்கிநிற்க
உன் கொலுசொலி
கேட்க குறுகுறுக்கிறது
செவிகள்...
கட்டியழும் உறவுகளும்
கதறியழும் நட்புகளும்
தொடர தொடங்கியது
என் பயணம்....
சற்றேனும் பொறுத்திரு
நிச்சயம் வருவேன்
என் இடுகாட்டு
பூக்களின் வழிபார்த்து...
நிராசையான
என் காதலின்
உடைந்த துகள்களை
சேகரித்தபடி...
எனக்கான உன்
கண்ணீர் துளிகள்
பெற்றுச்செல்ல
நிச்சயம் வருவேன்
சற்றேனும் பொறுத்திரு ....
கண்கள்
மூடிக் கொண்டன
முழுதாய்...
உன்குரல் கேட்டலைந்த
காதுகள்
சலனமறியா நிசப்தத்தின்
மடியில்...
உன் பெயர்
சொல்லித்திரிந்த
வாய்
வார்த்தைகளில்லா
மௌனத்தில்...
உன் கைபிடித்து
வந்த கைகளும்
உன் கால் தொடர்ந்த
என் கால்களும்
இதோ கட்டப்பட்டன
அசைவின்றி...
எவரும் உணராவண்ணம்
இன்னும் துடிக்கிறது
என் இதயம்
உனக்காக...
மூடிய இமைகளுக்குள்
தேடியலைகின்றன
விழிகள் உன்
பிம்பத்தை...
உனக்கான வார்த்தைகள்
உதடுகளுக்குள்
தேங்கிநிற்க
உன் கொலுசொலி
கேட்க குறுகுறுக்கிறது
செவிகள்...
கட்டியழும் உறவுகளும்
கதறியழும் நட்புகளும்
தொடர தொடங்கியது
என் பயணம்....
சற்றேனும் பொறுத்திரு
நிச்சயம் வருவேன்
என் இடுகாட்டு
பூக்களின் வழிபார்த்து...
நிராசையான
என் காதலின்
உடைந்த துகள்களை
சேகரித்தபடி...
எனக்கான உன்
கண்ணீர் துளிகள்
பெற்றுச்செல்ல
நிச்சயம் வருவேன்
சற்றேனும் பொறுத்திரு ....
No comments:
Post a Comment